Mnadu News

எல்லையில் ஊடுருவல்: 3 பாகிஸ்தானியர்கள் கைது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் கைபெர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. முன்னதாக புதன்கிழமை நள்ளிரவு அமிர்தசரஸ் அருகே ஒருவரும், வியாழக்கிழமை பிற்பகல் குர்தாஸ்பூர் அருகே ஒருவரும் சர்வதேச எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அவர்களை பிடித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு நாள்களில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் ரோந்து பணிகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share this post with your friends