கடந்த ஞாயிறன்று பாகிஸ்தான் எல்லையில் ஒரு கிராமத்தில் ஆப்கான் தலிபான் வீரர்கள் தாக்குல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து நேற்று உரையாற்றிய பாகிஸ்தான் பாதுபாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஆசிப், எல்லையில் நடைபெற்ற கொடிய தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்தார். முதலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால், இரண்டாவதாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கொடுத்த பதிலடி நடவடிக்கையில், ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது ஒப்புக்கொண்டது. அதன்பிறகு, எல்லைக் குழு ஒன்று கூடி, இந்த விஷயத்தை ஆய்வு செய்தது.அதையடுத்து, ஆப்கானிஸ்தான் அரசு மன்னிப்பு கேட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் உறுதியற்ற தன்மை பாகிஸ்தானில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அங்கு பசியும் வறுமையும் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் எவ்வாறு போரிட்டார்களோ, அப்படித்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை இஸ்லாமாபாத் விரும்புகிறது.காபூல் மற்றும் இஸ்லாமாபாத் ஒத்துழைக்காத வரை, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்படாது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More