Mnadu News

எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து.

இந்திய அரசால் கடந்த 1965-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் ;தேதி எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டின் சர்வதேச எல்லைகளை பாதுகாப்பதில் இப்படை முக்கிய பங்காற்றி வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதமும் 1- ஆம் தேதி எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “அனைத்து எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி நாள் வாழ்த்துக்கள். இந்தியாவைப் பாதுகாப்பதிலும், நமது தேசத்திற்கு மிகுந்த விடாமுயற்சியுடன் சேவை செய்வதிலும் சிறந்த சாதனை படைத்த படை இது. இயற்கை பேரழிவுகள் போன்ற சவாலான சூழ்நிலைகளின் போது எல்லை பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் உன்னதமான பணியை நான் பாராட்டுகிறேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends