மேற்கு சூடானில் உள்ள எல் பஷிரில் 80 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக இந்திய தூதரகத்;திற்கு தகவல் கிடைத்தது.அதையடுத்து ,பேரின் உக்கிரத்தில் சிக்கியுள்ள அந்த பகுதியிலிருந்து இந்தியர்களை பத்திரமாக சூடான் துறைமுகம் கொண்டு வரும் மிக கடினமான பணியை மேற்கொள்ள ஆலோசனை நடத்தப்பட்டு திட்டம் திட்டப்பட்டது.அத்திட்டப்படி, மேற்கு சூடானில் உள்ள எல் பஷிரில் இருந்து இரண்டு பேருந்துகளில் 80 இந்தியர்களை தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தது. இவர்கள் அனைவரும் 48 மணி நேரம் பயணத்திற்கு பிறகு பத்திரமாக சூடான் துறைமுகம் வந்தடைந்தனர். இதுவரை சூடானின் பல்வேறு பகுதிகளில் இருந்து 67 பேருந்துகள் மூலம் 3 ஆயிரத்து 584 இந்தியர்கள் மீடக்கப்பட்டு சூடான் துறைமுகம் கொண்டு வரப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More