Mnadu News

எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கத்திற்கு புரஸ்கார் விருது: சாகித்ய அகாடமி அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளங்கிய சிறுகதை, கவிதை, கட்டுரைகளுக்கான இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.அந்த வகையில் கீழடி அகழாய்வை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட ‛ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக அதனை எழுதிய எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், திருக்கார்த்தியல் சிறுகதை ஆசிரியர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share this post with your friends