Mnadu News

எவ்வளவு சேற்றை வாரியிறைத்தாலும் தாமரை மலரும்: பிரதமர் மோடி சூளுரை.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 11 கோடி வீடுகளுக்கு நேரடியாக குடிநீரை கொண்டு சேர்த்திருக்கிறோம். ஆனால், 2014 வரை வெறும் 3 கோடி வீடுகளில்தான் குடிநீர் இணைப்பு இருந்தது. நாடாளுமன்றத்தில் சில எம்.பி.க்களின் செயல்பாடுகளும் அவர்கள் பயன்படுத்தும் மொழியும் வேதனையைத் தருகிறது. நாட்டின் பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வுகளை கண்டு வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.அதே சமயம்,எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரியிறைத்தாலும் தாமரை மலரும் என்ற பிரதமர், மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் பொன்னான நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்து வருகின்றன என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

Share this post with your friends