‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து “நீலம் புரொடக்ஷன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More