Mnadu News

ஏடிஎம் கொள்ளை: இருவருக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், பணம் வழங்கும் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாயை திருடிச் சென்றது.இதில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரம், கர்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் தனிப்படை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இருவரை நேற்று இரவு காவல் துறையினர் ஹரியாணாவில் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வந்தனர்.இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி இருவரையும் மார்ச் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More