புது டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முதல் அமைச்சர்; சித்தராமையா, ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 1ஆம் தேதி இலவச அரிசி திட்டத்தை தொடங்கக் கூடாது என்பதற்காகவும், காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியை தோல்வி அடையச் செய்யவும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சதி செய்துள்ளது.ஏராளமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள இந்திய உணவுக் கழகம் கர்நாடகத்திற்கு கிலோ 34 ரூபாய் வீதம் 2 மெட்ரிக் டன் அரிசியை வழங்க ஜூன் 12ஆம் தேதி ஒப்புதல் தெரிவித்த நிலையில், அரிசி மற்றும் கோதுமையை மாநில அரசுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு அரிசி வழங்குவது தொடர்பாக அரசியல் விளையாடவோ அல்லது வெறுப்பு அரசியலோ செய்யக்கூடாது என்று பேசியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More