Mnadu News

ஏவுகணையை வைத்து புதின் என்னை மிரட்டினார்: போரிஸ் ஜான்சன் வாக்கு மூலம்.

பிரிட்டன் பிரதமர் பதவியை சில மாதங்களுக்கு முன்னர், ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன் பிபிசி நிறுவனத்திற்கு சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருக்கிறார்.அதில் புதின் குறித்து அவர் கூறிய தகவல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் போரிஸ் ஜான்சன், “உக்ரைன் மீது படையெடுத்தால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும், நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லைகளுக்குள் நுழைவதற்கும் வழிவகுக்கும் என்று 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே புதினுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். மேலும் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தடுப்பதற்காக உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோவில் சேராது என்றும் நான் புதினிடம் கூறினேன். ஆனால் ஒரு கட்டத்தில் புதின் என்னை மிரட்ட ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து அவர் பேசும்போது, “போரிஸ் ஜான்சன், நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால்,ஏவுகணை மூலம்,அது ஒரு நிமிடம் நிகழலாம்” என்றார். அதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை தொனியிலிருந்து புதின் விலகியது அவரது பேச்சில் தெரிய வந்தது” என்று தெரிவித்தார்.

Share this post with your friends