கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் தற்போது 493 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் 18,956 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 12,776 பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. 6180 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, உயர்கல்வி நிலையங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்று கல்வித் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை அனுப்பியிருக்கிறது.
காலிப்பணியிடங்கள் உருவாவதும், அதனை நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைதான் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் உருவாவது மற்றும் அதனை நிரப்புவது தொடர்பாக நடவடிக்கைகளை மாதந்தோறும் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More