Mnadu News

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோள்களில் தான் நிற்கிறீர்கள்: மத்திய அரசு மீது சிதம்பரம் தாக்கு.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், இன்னாள் நிதியமைச்சருக்கு பதில் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி அரசின் சாதனைகளை விளக்கி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவர் மேற்கோள் காட்டிய பல எடுத்துக்காட்டுகள் உண்மையானவை. 5 அல்லது 10 வருடங்கள் ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் உண்மைகளை தெரிவித்ததைப் போல இவையும் உண்மையே. ஒவ்வொரு அரசாங்கத்தின் ஆட்சிகாலத்திலும் சிலபல சாதனைகள் எட்டப்படும். மோடி அரசும் அவ்வாறே செய்துள்ளது. என்றாலும் மோடி அரசு சில இடங்களில் உயர்ந்து நிற்பதாக கருதினால் அது, முந்தைய ஐமுகூ அரசின் தோள் மீது நிற்பதே காரணமாக இருக்கும்”. என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends