ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ளதரவுகளின் படி, செயல்பாடுகள் மூலம் திரட்டப்பட்ட வருவாய் 19 ஆயிரத்து 58 கோடியே 29 லட்சம் ரூபாயாக இருந்தது, இது 2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 17 ஆயிரத்து 754கோடியே 2 லட்சம் ரூபாய் ஆக இருந்தது. மொத்த செலவினங்கள் 12ஆயிரத்து 632 கோடியே 29 லட்சம் ரூபாய் ஆக அதிகரித்து 12 ஆயிரத்து 907கோடியே 84 லட்சம் ரூபாய் ஆனது. 2023ஆம் நிதியாண்டில் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.65ஆயிரத்து 204 கோடியே 96 லட்சம் ரூபாயிலிருந்து 76 ஆயிரத்து 518 கோடியே 21 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அதையடுத்து, ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 22 புள்ளி ஆறு ஆறு சதவீதம் அதிகரித்து 5ஆயிரத்து 225 கோடியே 2 லட்சம் ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More