ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து, ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை இன்று திறக்கப்பட்டது.இருநாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அன்டோனியோ குட்டரெஸ{ம் இணைந்து சிலையை திறந்து வைத்தனர். இந்திய அரசு பரிசாக வழங்கிய இந்த சிலையை, புகழ்பெற்ற இந்திய சிற்பியும், ‘பத்மஸ்ரீP’ விருது பெற்றவருமான ராம் சுதார் வடிவமைத்ததாகும்.
இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை திறப்பு.
ஏற்கெனவே கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கு சூர்ய பகவான் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. அது பாலப் பேரரசு கால 11-ஆம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும். அதனை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பரிசாக அளித்தார். அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் ஐ.நா.வுக்கு இந்தியா அளித்த முதல் பரிசு.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More