Mnadu News

ஒசூரில் ஐபோன் தொழிற்சாலை, 53,000 பேருக்கு வேலை: தங்கம் தென்னரசு தகவல்.

ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஒசூரில் தொடங்கப்பட உள்ளதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இந்த புதிய ஆலையில் 3 மாதங்களில் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 53 ஆயிரம் பேரை நிறுவனம் பணிக்கு அமர்த்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஒசூரில் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமையவுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் குறிப்பிட்டார். அப்போது, புதிய ஐபோன் தொழிற்சாலையில் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அவர்களில் 6ஆயிரம் பணியாளர்கள், ராஞ்சி மற்றும் ஹஜாரிபாக் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends