ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், அப்பகுதியில் செல்ல வேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, பிறகு தண்டவாள சீரமைப்புப் பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட, கோடை விடுமுறை முடியும் காலம், பள்ளிகள் திறக்கப்படுவது போன்றவற்றாலும் ரயில்களில் டிக்கெட்டுகள் கிடைக்காததால் பலரும் விமான சேவையை நாடுவதால், நேரடி விமானங்களின் கட்டணம் மூன்று மடங்காகியிருக்கிறது. அனைத்து விமானங்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. வெறும் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5ஆயிரம் ரூபாய்; வரை இருக்கும் டிக்கெட்டுகள் தற்போது 16 ஆயிரம் முதல் 22 ஆயிரம ;ரூபாய் வரை விற்பனையாவதாகக் கூறப்படுகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More