ஜூன் 2ஆம் தேதி நடந்த ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களில் 208 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால், சில உடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடுவதால், மரபணு சோதனைக்குப் பிறகே அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துபோன உடல்களை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பது என்று மாநில அரசு முடிவெடுத்துவிட்டது.ஆனால், மரபணு சோதனைக்கு வரும் உறவினர்கள், பல மாநிலங்களிலிருந்து வந்திருந்து சோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் பலர் தினக்கூலிகளாவர். இவர்கள் கடன் வாங்கி வந்த பணம் தீர்ந்துள்ள நிலையில், எப்படி உடலை வாங்கிக் கொண்டு ஊர் திரும்புது என்று தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More