Mnadu News

ஒடிசா ரயில் விபத்து: விசாரணை வளையத்தில் இருந்த பொறியாளர் தலைமறைவு.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.விபத்து நடந்தபோது பணியில் இருந்த சிலரை சிபிஐ தங்களின் வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சிபிஐயின் விசாரணை வளையத்தில் இருந்த சிக்னல் பிரிவு இளநிலை பொறியாளர் அமீர் கான், பாலசோரில் அவர் குடியிருந்த வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, அவரின் வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ள சிபிஐ காவல்துறையினர், அமீர் கானை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share this post with your friends