ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் சாத்பில் நடத்தப்படும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 100 நாள்களை நிறைவு செய்ததையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது. இந்திய பிராந்தியத்தின் 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டது. 20 வீரர்களைக் கொன்றுள்ளது. அண்மையில் அருணாசல பிரதேச எல்லையில் சீனப் படையினரால் நமது வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான பல உண்மைகளை மத்திய அரசு மூடி மறைக்கிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத செயல். எல்லையில் சீனா மேற்கொள்வது ஆக்கிரமிப்பு முயற்சில்ல. அது போருக்கான் முன்னேற்பாடு. ஆவர்கள் அங்கு குவிக்கும் ஆயுதங்களைப் பார்த்தால், அதனைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரிஜிஜு டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய ராணுவத்தை மட்டும் ராகுல் காந்தி அவமதிக்கவில்லை, ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதித்துள்ளார். அதே வேளையில், இந்திய ராணுவத்தை நினைத்து இந்திய மக்கள் பெருமைப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More