Mnadu News

ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.

கோவையில் உள்ளாட்சி தினத்தையொட்டி மாநகராட்சி, நகராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ள அவர், வடகிழக்குப் பருவமழையையொட்டி தமிழக முதல் அமைச்சர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறைகளுக்கும் முதல்வர் உத்தரவுகளை வழங்கியுள்ளார்.
மின்வாரியத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய தலைமையகத்தில் ஆய்வு செய்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் அவர்கள் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மின்வாரியத்தைப் பொருத்தவரை, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் கூறி உள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More