Mnadu News

ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்.அதோடு, எஸ்சிஓ வலிமையைப் பெருக்கி, பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போராட வேண்டும்.அதே நேரம், எஸ்சிஓ-வை வலிமையாக்கவும், அதற்கான பங்களிப்பை வழங்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.அதே வேளையில்,சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது, மக்களிடம் நேரடியாக பணம் வசூலிப்பது என பயங்கரவாத அமைப்புகள் புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன.அத்துடன், ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு, பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வெளிப்படையாக நிதி திரட்டுகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோல் அந்த அமைப்பு நிதி திரட்டுகிறது என்று உரையாற்றினார்.

Share this post with your friends