சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது மாமியார் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும், 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளனர்.இந்த மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதா, அதிமுகவைச் சேர்ந்த மன்னர்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் தான் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி. சந்திரசேகரன், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி மூன்று மாதத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More