32 வயதான மைக்கெல் பிரேஸ்வெல் நியூசிலாந்திற்கு நல்ல ஆல்ரவுண்டர் ஆவார். 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 510 ரன்களை எடுத்துள்ளார். 2 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். பந்து வீச்சில் 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிகாக நன்றாக விளையாடிய உள்ளார்.இந்த நிலையில், இங்கிலாந்தின் டி20 பிளாஸ்ட் போட்டியில் பேட்டிங் ஆடும்போது பிரேஸ்வெல்லுக்கு வலது காலின் தசை நாரில் காயம் ஏற்பட்டது. இங்கிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. 6 முதல் 8 மாதங்கள் ஓய்வு தேவைப்படுவதால் நியூசிலாந்து வீரர் மைக்கெல் பிரேஸ்வெல் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டார் என்று நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More