சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமாக பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.இந்த நிலையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 81ஆயிரத்து 503 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More