“துணிவு”திரைப்படம் முழு வீச்சில் நிறைவு கட்டதை எட்டி வரும் நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகர்கள் டப்பிங் புகைப்படங்களை வெளியிட்டு தல ரசிகர்களை உற்சாகம் ஆக்கி வருகின்றனர்.
ஜிப்ரான் இசையில் அனிருத் குரலில் ஒரு மாஸ் குத்து பாடல் முதல் சிங்கிளாக வெளியாகி உள்ளது. அதே போல டீஸர் வெளியீடு பற்றியும் படக்குழு திட்டம் போட்டுள்ளனர்.
இதற்கிடையில் படத்தின் பிரீ ரீலீஸ் நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்பாரா என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவர் அவரது பி ஆர் ஓ சுரேஷ் சந்திரா மூலம் பதில் கூறியுள்ளார்.
“ஒரு நல்ல படமே அதற்கான சிறந்த விளம்பரம் – அளவற்ற அன்பு – அஜித் ” என பதிவிட்டு உள்ளார்.