Mnadu News

ஒளிரும் நட்சத்திரமாக திகழும் இந்தியா: துணை குடியரசுத் தலைவர் பேச்சு.

சென்னை ஐஐடியில் புத்தாக்க வசதி மையத்தை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர் பேசியதாவது: உலக அரங்கில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. 2014க்கு முன்பாக கூட்டணி கட்சிகளின் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது.தனிக்கட்சி ஆட்சியாக 2014ல் அமைந்தது. அதன் பின் தான் இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது. 2014க்கு பிறகு நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறது. என்று அவர் பேசினார்.சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர் சென்னை வந்தார். ஆளுநர்; ரவி, முதல் அமைச்சர்; ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Share this post with your friends