அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து கொள்ளலாம் என்ற சட்டம் உள்ளதால், அது தற்போது அமெரிக்க மக்களுக்கே பெரும் சிக்கலாக உருவாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்நிலையில், அங்கு பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம், அமெரிக்க மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் மெஹ்ரஹொர் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கணவன் மனைவிக்கு இடையே நடந்த குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி, குழந்தை, பக்கத்து வீட்டு நபர்கள் இருவரையும் சுட்டு கொன்றுள்ளர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த் சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.