கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் உலகெங்கிலும் உள்ள எனது மலையாளி சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் என்றும் இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையையும் வாழ்வையும் பிரதிபலிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.