துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திர நாத் அவர்கள் தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி அறிவிப்புகள் வெளியாகும் முன்னே தேனியில் உள்ள ஒரு கோயிலில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டு பொதிக்கப்பட்டிருக்கிறது.
கோவில் நிர்வாகத்திற்கு அரசியல் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் புதிய கல்வெட்டுக்கு மேல் புதியதொரு கல்வெட்டை வைத்து ரவீந்தரநாத் பெயரை மறைத்தனர்.