1974ல் கச்சத்தீவு இந்திரா காந்தியால் இலங்கைக்கு தரப்பட்டது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கடந்த 2015 வங்கதேசத்தின் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவின் 111 பகுதிகள் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டன. வங்கதேசத்துடனான ஒப்பந்தம் இருநாட்டு மக்களின் இதயங்களை இணைக்கும் என்று அப்போது மோடி கூறினார்.
இதேபோன்ற நட்பு ரீதியான ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் கடந்த 1974ல் இலங்கைக்கு கச்சத்தீவு தரப்பட்டது.ஆனால், கச்சத்தீவு இலங்கைக்கு தரப்பட்டதை மட்டும் பாஜக விமர்சிப்பது ஏன்? இலங்கையுடன் போரிட்டுதான் கச்சத்தீவை மீட்க முடியும் என்று உங்கள் அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதஜி கடந்த 2014ல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளாள்ர். மேலும் மக்களவை தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயம் காரணமாக இப்போது பிரதமர் மோடி கச்சத்தீவு பிரச்சனையை கிளப்புகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.