பொள்ளாச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிருந்தா உத்தரவின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற மூதாட்டியை நிறுத்தி சோதனையிட்ட போது 500 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதேபோல் வஞ்சிபுரம் பிரிவு பகுதியில் நின்ற வாலிபரிடம் சோதனை செய்தபோது 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவன் சூரியபிரகாஷ் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்