Mnadu News

கடந்த கால சவால்களை மேற்கொண்டு புதிய இந்தியா வளர்கிறது: பிரதமர் மோடி உரை.

இமாசல பிரதேசத்தில் நாட்டின் 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இமாச்சல பிரதேசம் மற்றும் உனாவுக்கு தீபாவளி பண்டிகை முன்னரே வந்து விட்டது. நான் இன்று புதிய வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன். நாட்டில் அறிமுகம் செய்யப்படும் 4-வது வந்தே பாரத் ரெயில் இதுவாகும். கிராமப்புற சாலைவழி மேம்பாடு, அனைவருக்கும் குடிநீர் வினியோகம் கிடைக்க செய்தல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் முன்னேற்றத்துடன் கூடிய சுகாதாரநலன் சார்ந்த வசதிகள் ஆகியவை அரசின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் ஆகும். புதிய இந்தியாவானது, கடந்த கால சவால்களை மேற்கொண்டு கடந்து, விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

.

.

Share this post with your friends