Mnadu News

கடலில் 2ஆயிரம் மெகாவாட் காற்றாலை: ஜூலையில் மத்தியரசு ‘டெண்டர்’ வெளியீடு.

கடலில் காற்றாலை மின் நிலையங்களை நம் நாட்டிலும் அமைக்க, தேசிய காற்று சக்தி நிறுவனம் வாயிலாக பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.அதன் அடிப்படையில், கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை கடலில், 4ஆயிரம் மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க திட்டமிட்டு உள்ளது.அதில் முதல் கட்டமாக, 2 ஆயிரம் மெகா வாட் மின் நிலையம் அமைக்கும் நிறுவனத்திற்கு கடற்பரப்பை குத்தகைக்கு விட, மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை ஜூலையில் டெண்டர் கோர உள்ளது. டெண்டரில் தேர்வாகும் நிறுவனம், மின் நிலையம் அமைப்பது தொடர்பான இரு ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ளும்.,மின் நிலையம் அமைக்கும் பணி, 2025ல் துவங்கி, 2028ல் மின் உற்பத்தி துவக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழக கடலில் அமைக்கப்படும், காற்றாலை மின்சாரத்தை ஒரு யூனிட், 4 ரூபாய்க்கு வாங்க தமிழக மின் வாரியம், மத்திய அரசுக்கு விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கு மேல் உள்ள தொகையை மத்திய அரசு வழங்கும்.

Share this post with your friends