தமிழக கடலோரப் பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறி, தூண்டில் வளைவு அமைக்க தடை விதித்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மீனவ நலச்சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடல் அரிப்பைத் தடுக்க, தமிழக கடலோரப் பகுதிகளில் செயற்கை பாறைகளை நிரவ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More