கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவின் நியூயார்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், வீடுகளும், வெளியே நிற்கும் கார்களும் பனியில் மூடியுள்ளன. சாலைகளில் பல அடி மீட்டருக்கு பனித்துளிகள் படர்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பனிப்புயல் மற்றும் விமான நிலைய ஓடுதளங்களில் ஏற்பட்டுள்ள பனியால் பல்வேறு மாகாணங்களில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 137 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அனைத்து போக்குவரத்தும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More