கடும் பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தான் நாடு பல மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் அங்கு பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை உயர்வு:
இது தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார் நேற்று வெளியிட்டு உள்ளார், அதன்படி அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ₹35 உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போன்று, மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆயில் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு தலா ₹18 உயர்த்தப்பட்டிருக்கிறது. விலை உயர்வுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹249.80 ஆகவும், டீசல் விலை ₹262.80 ஆகவும், மண்ணெண்ணெய் ₹189.83 ஆகவும், டீசல் ஆயில் விலை லிட்டருக்கு ₹187 ஆகவும் உள்ளது.
