தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பள்ளிக்கூட தென்வடல் தெரு பகுதியில் வாடகை கட்டடத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ,தென்காசி வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி, கடையநல்லூர் வட்டாட்சியர் சண்முகம், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More