கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஜித் பவார், எதிர்க்கட்சி தலைவராக நான் கடுமையாக செயல்படவில்லை என என்னிடம் கூறினர். எதிர்க்கட்சி தலைவர் மீது நான் எப்போதும் ஆர்வம் காட்டியது கிடையாது. ஆனால், எம்.எல்.ஏ.,க்களின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொண்டேன். கட்சி அமைப்பில் எனக்கு ஏதாவது ஒரு பதவி வழங்குங்கள். அந்த பதவியில் நியாயமுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்வேன். எனது கோரிக்கை குறித்து கட்சி மேலிடம் பரிசீலனை செய்ய வேண்டும்என்று பேசியிருந்தார். இது தொடர்பாக பேசியுள்ள சுப்ரியா சுலே,அஜித் பவாரின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பது எனது விருப்பம். அவருக்கு கட்சியில் பதவி வழங்குவதா அல்லது வேண்டாமா என்பது கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு. அமைப்பு ரீதியில் அஜித் பவார் பணியாற்ற விரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை அளிக்கும். சகோதரி என்ற முறையில் எனது சகோதரரின் விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More