ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் நடந்த நிகழ்ச்சியில்,பேசியுள்ள பாஜக., தேசிய தலைவர் நட்டா,கடந்த 2014க்கு முன், 2ஜி, 3ஜி ஊழல்கள் உட்பட பல ஊழல்கள் நடந்தன. அப்போது ஊழல் நிறைந்த நாடாக இந்தியா கருதப்பட்டது. ஆனால் பாஜக., ஆட்சி அமைத்த பின் ஊழல் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உலகில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி, பா.ஜ.க, தான் என, இன்று பெருமையுடன் கூறலாம். நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் குடும்பங்களின் கட்சிகளாக மாறிவிட்டன. ஆனால் கட்சியினரை குடும்பமாக பார்ப்பது பாஜக., மட்டும் தான். கட்சியே குடும்பமாக இருக்கும் கட்சியில் சேர்ந்திருப்பது பாஜக.,வினருக்கு கிடைத்த பாக்கியம். ஏன்று பேசி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More