கட்டாய மதமாற்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தில் வலுக்கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணையின் போது. தமிழக அரசு சார்பில் பிரம்மாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.அதே சமயம் தாங்கள் பின்பற்ற விரும்பும் மதத்தைத் தேர்ந்தெடுக்க குடிமக்களுக்கு சுதந்திரம் உள்ளது. அதே நேரம், மிஷனரிகள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு சட்டவிரோதமான வழிகளைப் பயன்படுத்தாத வரையில், அது சட்டவிரோதமானது இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More