செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஷ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, முனிஸ்காந்த் ஆகியோர் நடிப்பில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் “கட்டா குஸ்தி”.
டிசம்பர் முதல் வாரத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சுமார் ₹40 கோடிகளை வசூலித்தது. இதன் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளார் விஷ்ணு விஷால்.
ஏற்கனவே இப்படத்தின் ஒடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் கைபற்றி உள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கட்டா குஸ்தி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.