Mnadu News

“கட்டா குஸ்தி” படத்தின் செகண்ட் சிங்கிள் மற்றும் ஒடிடி ரீலீஸ் குறித்த அப்டேட்ஸ்!

விஷ்ணு விஷால், ஐஷ்வர்யா லக்ஷ்மி முன்னணி ரோல்களில் நடித்து, செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது “கட்டா குஸ்தி”.

விஷ்ணு விஷால் & ரவி தேஜா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை  ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் “மைக் டைசன்” ஜஸ்டின் பிரபாகரன் இசை மற்றும் வரிகளில் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் ஒடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாங் லிங்க் : https://youtu.be/glOZQ6Tc2HY

Share this post with your friends