செல்லா அய்யாவு இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில், விஷ்ணு விஷால், ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ள படம் ” கட்டா குஸ்தி”. டிசம்பர் இரண்டாம் தேதி இப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான “சல் சக்கா” என்ற திருமண கொண்டாட்ட பாடல் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டது. இந்த நிலையில் படக்குழு அடுத்த பாடலான “மைக் டைசன்” பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் விவேக் வரிகளை எழுதி உள்ளார்.