கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவையடுத்து வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ_க்கு சாதகமாக வந்துள்ளன. ஒரு சில நிறுவனங்கள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என தெரிவித்துள்ளன. இந்நிலையில் மஜத தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி திடீர் பயணமாக சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். கருத்துக் கணிப்புகள் மஜதவுக்கு எதிராக வந்ததால் அவர் மனவருத்தம் அடைந்துள்ளதாகவும், மன உளைச்சலில் இருந்து வெளிவருவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார் என்றும் மஜத வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் ஆட்சி அமைக்க மஜதவின் துணை தேவைப்படும் என்பதால் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் அவருக்கு வலைவீசி உள்ளனர்.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More