Mnadu News

கனடாவில் இளைஞர் சுட்டுக் கொலை! காரணம் என்ன தெரியுமா? போலீசார் வலைவீச்சு!

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் 24 வயதான இளைஞர் சன்ராஜ் சிங் . இவர் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வசித்து வந்த இவர் ஒரு சீக்கியர். எட்மன்டன் நகரில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சன்ராஜ் வாகனத்தை மறித்து, அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு மாயமாகி உள்ளார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்ட சுற்றத்தார் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது, அவர் தனது வாகனத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில், போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துவிட்டு சன்ராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சன்ராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கனடாவில் தொடர்ந்து இது போன்ற வேறு மதங்களை சேர்ந்தவர்கள் கொலை செய்யபடுவது தொடர்கதையாகி வருகிறது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More