கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதோடு, தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையிலும், இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயிரிழந்த மாணவியின் தாயார், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் மாணவியின் உடலில் ஏற்பட்ட காயம் குறித்து நீதிபதிகள் கேட்டறிந்தனர். பின்னர், ஜாமீனை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More