Mnadu News

கபில் சிபல் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினை.

சித்தாந்த ரீதியாக ஒன்றிணைந்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கபில் சிபல் தெரிவித்திருப்பதற்கு பதிவளித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணீஷ் திவாரி, சித்தாந்தங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 3-வது முறையாக யுபிஏ ஆட்சி அமைவது உறுதி” என்று தெரித்துள்ளார்.அதே நேரம், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் நாட்டின் பிற பகுதிகளையும் மணிப்பூர் போல ஆக்கி, மதம் மற்றும் சாதியின் பெயரால் அமைதியில்லாத நிலையை உருவாக்கிவிடுவார்கள். எனவே, பாஜகவுக்கு எதிராக கூட்டணி உருவாக்குவது முக்கியம்.அதோடு, சித்தாந்தம் ஒன்றாக இருக்கவேண்டும் அதுதான் முக்கியம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர பிரமோத் திவாரி கூறியுள்ளார்.

Share this post with your friends