கமல்ஹாசன்:
சுமார் 60 வருடங்களாக கலையின் செல்லப் பிள்ளையாய் இயங்கி வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். விக்ரம் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு இன்னும் துடிப்போடு வேலை செய்து வருகிறார். அது மட்டுமின்றி குறுகிய பட்ஜெட்டில் பல நடிகர்களை கமிட் செய்து படங்களை தயாரித்து வருகிறார். ஆம், இவரின் நடிப்பில் எப்படி பல படங்கள் வெளியாக உள்ளனவோ, அப்படியே தயாரிப்பிலும் வெளியாக உள்ளன.
சிம்பு :
மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களின் தொடர் வெற்றி சிம்புவை சரியான பாதைக்கு மீண்டும் அழைத்து வந்துள்ளது எனலாம். ஆம், இது சிம்புவின் செகண்ட் இன்னிங்ஸ் என சொல்லும் அளவுக்கு அமைந்தது மாநாடு. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு பார்ட் 2, விண்ணை தாண்டி வருவாயா பார்ட் 2 படங்களின் வரிசையில் உள்ளன. அதற்கு முன்பாக ராஜ் கமல் ஃபில்ம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் சிம்பு ஈடுபட்டு வருகிறார்.
கமல் மணிரத்தினம் படத்தில் சிம்பு :
நாயகன் படத்துக்கு பிறகு, கமல் மணி ரத்தினம் இருவரும் இணைந்துள்ள படம் கமல் 234. இசை புயல் ரஹ்மான் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார். இதன் பிரி புரொடக்ஷன் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றது. இதில், ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் கசிந்து உள்ளது. அதாவது, இதில் சிம்பு ஒரு முக்கிய ரோலில் நடிப்பது தான் அது. இதை கேள்விப்பட்ட நடிகர் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.