Mnadu News

கம்யூனிஸ்டுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரசுக்கு ஆதரவு இல்லை: மம்தா நிபந்தனை.

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் ஜூலை 8ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கலின் போது கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.இந்த மோதல் தொடர்பாக பேசியுள்ள மம்தா, பல மாநிலங்களை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரிய கூட்டணி கட்சியாக உள்ளது. பா.ஜ.க,வின் மிகப்பெரிய கூட்டாளியாகவும் உள்ளது.இந்த நிலையில்,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு எதிரான போராட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. நாங்களும் பா.ஜ.க,வை எதிர்த்து போராட விரும்புவதால், காங்கிரசுக்கு ஆதரவளிப்போம். ஆனால், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டால், நாங்கள் ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் எதிர்பார்க்கக் கூடாது. என்று கூறி உள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More