முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் மெரீனாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்தது.திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதி பெற்று அடுத்த கட்ட பணியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.இந்நிலையில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More